Written by TamizhgnaniMay 5, 2024
இறைவாழ்த்து
ஆன்மிகம் Article
இறைவாழ்த்து
எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமெனநான் தெளிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விரைந்த தாலோ
உயிர்களிடத்தில் வேற்றுமை பாராமல் ,எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணி அருளால் சேவை செய்யும் உரிமை நமக்கு உண்டு என எண்ணுபவர் உள்ளமே இறைவன் திருநடனம் புரியும் இடம் என நான் தெரிந்து கொண்டேன். ஆதலால் அந்த ஞானிகளுக்கு தொண்டு செய்திட என் மனம் விரும்புகிறது.
Leave a Reply