மெய்ப்பொருள்
மெய்ப்பொருள் மெய்ஞானம் என்பது உண்மை ஞானம். நித்திய ஞானம். அனைத்தையும் அறியக்கூடிய அறிவு, இறைவனை உணரக்கூடிய அறிவு போன்ற பல்வேறு பெயர்களை நாம் கூற இயலும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மெய்ஞானத்தை உள்ளபடி அறிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று .ஏனென்றால் இந்த மெய்ஞானம் உணர்ந்த குருமார்கள் இக்கால கட்டத்தில் அறிவது மிகவும் கடினம். இருப்பினும் அதனை அடைய முயற்சி செய்து கொண்டே இருப்பது நமது கடமை.நம்முடைய முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள் அனைவரும் மெய்ஞானத்தை பற்றி
இறைவாழ்த்து
இறைவாழ்த்து எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்முயிர்போல் எண்ணி யுள்ளேஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான் சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடமெனநான் தெளிந்தேன் அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்சிந்தைமிக விரைந்த தாலோ உயிர்களிடத்தில் வேற்றுமை பாராமல் ,எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் எண்ணி அருளால் சேவை செய்யும் உரிமை நமக்கு உண்டு என எண்ணுபவர் உள்ளமே இறைவன் திருநடனம் புரியும் இடம் என நான் தெரிந்து கொண்டேன். ஆதலால் அந்த ஞானிகளுக்கு தொண்டு செய்திட என் மனம் விரும்புகிறது.